ஆப்கானிஸ்தான் போட்டி: இந்திய வீரர்களுக்கு யோ-யோ டெஸ்ட்

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 04:06 pm

indian-players-to-undergo-yo-yo-test-ahead-of-afghanistan-test

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு யோ-யோ சோதனை நடத்தப்பட உள்ளது. 

ஐசிசி-யிடம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வருகிற ஜூன் 14ம் தேதி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை இந்தியா நடத்துகிறது. பெங்களுருவில் நடைபெற உள்ள இப்போட்டிக்கு அஜின்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க யோ-யோ டெஸ்டில் பங்கேற்பது அவசியம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மட்டுமின்றி, இதன் பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் விளையாடும் முத்தரப்பு தொடருக்கான அணியில் இடம் பிடித்திருக்கும் இந்திய ஏ அணி வீரர்களும், யோ-யோ டெஸ்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஜூன் 3 மற்றும் 4ம் தேதி யோ-யோ சோதனை பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. 

"வீரர்கள் யோ-யோ டெஸ்டில் பங்கேற்பது காட்டாயமாகும். ஏற்கனவே அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலும், இந்த நடைமுறையை வீரர்கள் பின்பற்றி தான் ஆகவேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் வீரர்கள் வரும் வாரத்தில் யோ-யோ டெஸ்டில் பங்கேற்பார்கள்" என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close