தொடர்ந்து சாதனைகளை முறியடிக்கும் ரஷீத் கான்

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 04:29 pm
rashid-khan-became-the-fastest-bowler-to-reach-50-t20i-wicket-milestone

குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்று சாதனையை படைத்தார் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான். 

ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் உத்தரகண்ட்டில் நடந்து வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான், ரஷீத் கானின் உதவியுடன் 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13 ரன்கள் மட்டுமே கொடுத்து ரஷீத் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

இதன் மூலம், டி20 போட்டியில் குறைந்த ஆட்டங்களில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில், இம்ரான் தாஹிருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ரஷீத் கான். 31 போட்டிகளில் ரஷீத் கான் 50 விக்கெட்கள் எடுத்துள்ளார். இந்த மைல்கல்லை அவர் எட்ட இரண்டு ஆண்டுகள் 220 நாட்கள் தேவைப்பட்டுள்ளது.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 26 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் (35) 3-வது, பாகிஸ்தானின் உமர் குல் (36) 4-வது, சயீத் அஜ்மல் (37) 5-வது இடங்களில் உள்ளனர்.

2015ம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமான ரஷீத் கான், சமீபத்தில் ஐ.பி.எல் போட்டியிலும் அனைவரது கவனத்தையும் பெற்றார். 

முன்னதாக, அதிவிரைவாக 100 ஒருநாள் விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரஷீத். 44 போட்டிகளில் அந்த மைல்கல்லை அவர் எட்டி இருந்தார். இதன் மூலம், மிட்செல் ஸ்டார்க் (52), ஸகிளைன் முஷ்டாக் (53), ஷேன் பாண்ட் (54) மற்றும் பிரட் லீ (55) ஆகியோரது சாதனைகளை முறியடித்தார். 

ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த இளம் வீரரும் ரஷீத் கான் (19) ஆவார். 44 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் ரஷீத் கான், 152 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close