4 நாட்களுக்கு அழுதுக்கொண்டு தான் இருந்தேன்: ஸ்மித்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 04:39 pm
spent-four-days-in-tears-smith

பந்து சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஓராண்டு தன்னை தடை செய்ததை நினைத்து 4 நாட்களுக்கு தொடர்ந்து அழுதுக்கொண்டு இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் ஆகியோர் ஒரு ஆண்டுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும், பன்காராஃப்டுக்கு 9 மாதங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டின் கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா'. அப்போது பத்தரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஸ்மித் கண்ணீர் விட்டு அழுது தனது நாட்டு மக்களிடமும் தன்னுடைய குழந்தையிடமும் மன்னிப்பு கேட்டார். 

இந்நிலையில் நேற்று சிட்னியில் உள்ள ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்மித் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது, "பந்து சேதப்படுத்திய சம்பவம் கண்டறியப்பட்ட பிறகு 4 நாட்களுக்கு நான் அழுதுக்கொண்டு தான் இருந்தேன். அப்போது கடுமையான மனப்போராட்டத்தில் இருந்தேன். அந்த நாட்களை கடந்து வந்தது தான் என் வாழ்க்கயைில் நான் செய்ததிலேயே கஷ்டமான ஒன்று. அப்போது தனக்கு ஆதரவாக குடும்பத்தாரும், நண்பர்களும் இருந்தனர். ஒரு ஆண் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விளையாட துவங்கும் போது புதிய உற்சாகத்துடன் களமிறங்குவேன்" என்றார். 

தற்போது ஸ்மித் கிளப் அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளார். குளோபல் கனடா டி20 போட்டியில் டொரான்டோ நேஷ்னல் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்த போட்டி ஜூன் 28ந்தேதி முதல் ஜூலை 15ந்தேதி வரை நடக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close