பிரேக்கப்-க்கு பின் பாண்டியா இப்போ யாரை டேட்டிங் செய்கிறார் தெரியுமா?!

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2018 06:26 pm

hardik-pandya-datting-another-bollywood-actress-after-his-break-up-with-elli-avrram

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பிரேக்-அப்பிற்கு பின் வேறொரு பாலிவுட் நடிகையுடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் பிரபலமான பேச்ளர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா, பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமை டேட்டிங் செய்து கொண்டிருந்தார். பாண்டியாவுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவ்ரம், அவரது சகோதரர் திருமணத்திலும் கலந்து கொண்டார். இது தவிர, பாண்டியாவின் சில போட்டிகளிலும் அவ்ரம் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தினார். 

இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வலம் வந்தது. இருப்பினும் அவர்களது உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக கூறவில்லை. இதற்கு நடுவே, இரண்டு வாரங்களுக்கு முன் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும், பாண்டியா மற்றொரு பாலிவுட் நடிகையை தற்போது டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஒரு நாளிதழ் வெளியிட்ட செய்திப்படி, பாண்டியா தற்போது நடிகை ஈஷா குப்தாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பாண்டியா பல நடிகைகளுடன் இணைத்து வைத்து பேசப்பட்டுள்ளார். ஆனால், இப்பொது வந்திருக்கும் செய்தியில் எந்த விளக்கவுரையும் இல்லை. 

அண்மையில், கே.எல். ராகுல், நடிகை திவா நித்ஹி அகர்வாலுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டார். அவர்கள் ஒரு மும்பையின் ஒரு கேஃபேவில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது. ஆனால், நாங்கள் பல காலமாக நண்பர்களாக இருப்பதாக அந்த ஜோடி விளக்கம் அளித்தது. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close