ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 04:25 pm

india-beats-sri-lanka-in-women-s-twenty20-asia-cup

இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை நம்பிக்கையுடன் தக்கவைத்துள்ளது இந்திய மகளிர் அணி. 

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தாய்லாந்து மற்றும் மலேசியாவை வீழ்த்திய இந்திய அணி, கடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நான்காவது போட்டியில் அதிரடியாக களமிறங்கியது இந்தியா. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ஏக்தா பிஷ்த் (2/20), ஜூலன் கோஸ்வாமி (1/20), அனுஜா பட்டில் (1/19) மற்றும் பூனம் யாதவ் (1/23) மொத்தம் 7 விக்கெட் வீழ்த்தி, இலங்கை அணியை 107 ரன்னுக்கு கட்டுப்படுத்தினர்.

இதனை அடுத்து களம் கண்ட இந்திய வீராங்கனைகள் மித்தாலி ராஜ் 23 ரன், மந்தனா 12, ஹர்மான்ப்ரீத் கவுர் 19, வேதா கிருஷ்ணமூர்த்தி 29, அனுஜா பட்டில் 19 அடித்ததில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது. 

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் நான்கு போட்டிகளில் 6 புள்ளிகளுடன் இருந்தாலும், +2.709 நெட் ரன்ரேட்டுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

வருகிற 9ம் தேதி இந்தியா, தனது கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினால், இறுதிச் சுற்றை எட்டும். அதே நாளில் வங்கதேசம் - மலேசியா அணிகள் மோதுகின்றன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close