கங்குலி இல்லாமல் தோனி இல்லை- சேவாக் ஓபன் டாக்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 12:17 pm
virender-sehwag-shares-about-ganguly-s-sacrifice-for-ms-dhoni

முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவாக், தோனிக்காக தனது பேட்டிங் வரிசையை கங்குலி தியாகம் செய்த கதையை பகிர்ந்து கொண்டுள்ளார். 

தற்போது ரசிகர்கள் கொண்டாடும் கேப்டன் கூல் தோனி, 2004ம் ஆண்டு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் தலைமையில் கீழ் இந்திய அணியில் இணைந்தார். அப்போது தோனி, டாப் ஆர்டரில் இறங்கி அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்தார். அவருடைய சிறந்த இன்னிங்ஸ், இலங்கை (183 ரன்) மற்றும் பாகிஸ்தானுக்கு (148 ரன்) எதிராக அமைந்தது. 

அதிரடி வீரர் மற்றும் வர்ணனையாளரான சேவாக், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, கங்குலி தியாகம் செய்யவில்லை என்றால் தோனி இப்படி ஒரு சிறந்த வீரராக வளர்ந்திருக்க முடியாது என்பதை குறிப்பிட்டார். தோனி, ராகுல் ட்ராவிட் தலைமையின் கீழும் சிறந்த வீரராக வளர்ந்திருக்கிறார். 

தோனியை ந.3ல் அறிமுகம் செய்த கங்குலி:

"அப்போது நாங்கள் பேட்டிங் ஆர்டருக்காக வீரர்களை சோதித்து வந்தோம். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தால், கங்குலி நம்பர் 3ல் இறங்க முடிவு செய்திருந்தார். இல்லையெனில், இர்பான் பதான் அல்லது தோனியை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த சமயம் கங்குலி, தோனிக்கு 3 அல்லது 4 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து பார்க்க நினைத்தார். அதனால் தான் தோனி 3ம் வரிசையில் களமிறக்கப்பட்டார். அப்போது அவர் அதை செய்யாவிட்டால், இப்போது ஒரு சிறந்த வீரராக தோனி உருவாகியிருக்க மாட்டார். எப்போதுமே கங்குலி, புது வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைப்பார்" என்றார். 

அணுகுமுறையை மாற்றிய தோனி:

"ராகுல் ட்ராவிட் கேப்டன்ஷிப்பின் போது, போட்டியை முடித்து வைக்கும் வீரருக்கான இடத்தை தோனி பெற்றார். இரண்டு முறை அவ்வாறு களமிறங்கிய தோனி, சொதப்பலான ஷாட்களை அடித்தார். அதற்காக ஒருமுறை ட்ராவிட்டிடம் இருந்து கண்டனமும் பெற்றார். அந்த சமயத்தில் இருந்து, தோனி முற்றிலும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு ஆடினார். அதிலிருந்து அவர் ஒரு சிறந்த ஃபினிஷராக இருக்கிறார். யுவராஜ் சிங்குடன் அவரது பார்ட்னர்ஷிப் மறக்க முடியாதது" எனவும் சேவாக் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close