தோனி, சாக்ஷி உடனான தனது உறவு- மனம் திறந்த பிராவோ

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 01:06 pm

dhoni-s-wife-sakshi-is-like-my-sister-says-bravo

ஐ.பி.எல் போட்டி பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஓர் அணியாக இணைத்து செயல்பட வைத்தது. இதில் சில வீரர்கள் ஒரே அணியில் பல காலமாக இணைந்து பங்கேற்பதால், அவர்களையும் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கின்றனர். 

ஐ.பி.எல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ட்வயன் பிராவோ, தனது அணியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். முக்கியமாக கேப்டன் எம்.எஸ். தோனியுடனான அவரது உறவு மிகவும் அழகானது. எப்போதும் தோனியை, மற்றொரு தாய் வயிற்றில் இருந்து வந்த தன்னுடைய சகோதரர் என்றே பிராவோ குறிப்பிடுவார். 

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இருந்து தனது நெருங்கிய நண்பர்களுக்கு பிராவோ விருந்து வைத்து அசத்தினார். அப்போது தான் பிராவோ தனது ட்விட்டரில் புகைப்படங்களை ஷேர் செய்து, "மற்றொரு தாய் வயிற்றில் இருந்து பெற்ற சகோதரர்... அவருடைய குழந்தையுடன், எனது தாய் மற்றும் என்னுடன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் பிராவோ, தோனியின் மனைவி சாக்ஷி உடனான உறவை சொல்லி ரசிகர்களை மேலும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். "சுரேஷ் ரெய்னா, தோனி போன்று பல வீரர்களிடம் நான் நெருக்கமான உறவை வைத்துள்ளேன். நங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர் என்றே குறிப்பிடுவோம். தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் நான்.. சகோதரர், சகோதரி என்றே சொல்லிக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close