டி20 தரவரிசை: ஆப்கானின் ரஷீத், நபி, முஜீப் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 05:32 pm

rashid-khan-gains-54-points-and-remains-at-top-in-icc-t20i-rankings

ஐசிசி-ன் டி20 தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷீத் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நம்பமுடியதாக முன்னேற்றத்தை கண்டுள்ளனர். 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இந்த நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டி20 தரவரிசைப் பட்டியலில், வங்கதேச தொடரில் 12 விக்கெட் எடுத்த ரஷீத் கான், 54 புள்ளிகள் அதிகமாக பெற்று 813 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 80 புள்ளிகள் பின்தங்கிய நிலையில், பாகிஸ்தானின் ஷதாப் கான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

முகமது நபி, 11 புள்ளிகள் ஏற்றம் கண்டு தனது சிறந்த தரவரிசையாக 8-வது இடத்திற்கு முன்னேறினார். முஜீப், 62 இடங்கள் முன்னேறி 51-வது இடத்தை பிடித்தார். 

ஆப்கானிஸ்தான் ஆல்-ரவுண்டர் சமியுல்லாஹ் ஷென்வாரி, இத்தொடரில் 118 ரன் அடித்து, 11 இடங்கள் ஏற்றம் கண்டார். இதனால் 44-வது இடத்திற்கு அவர் முன்னேறினார். 

வங்கதேச பேட்ஸ்மேன்கள் மஹ்முதுல்லாஹ் (4 இடம் ஏற்றம்) 33-வது மற்றும் முஷபிகுர் ரஹீம் (3 இடம் ஏற்றம்) 41-வது இடத்திற்கும் முன்னேறினர். 

வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஏவின் லெவிஸ் ஒரு இடம் ஏறி ஐந்தாவது இடத்தையும், கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஐந்து இடம் ஏறி 41-வது (பந்துவீச்சு), இலங்கை ஆல்-ரவுண்டர் திசாரா பெரேரா 3 இடங்கள் முன்னேறி 38-வது (பேட்ஸ்மேன் வரிசை) இடத்தையும் பிடித்தனர். 

அணிகள் வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், 8-வது மற்றும் 10-வது இடங்களின் முறையே உள்ளன. நான்கு புள்ளிகள் உயர்ந்து ஆப்கானிஸ்தான் 91 புள்ளிகளுடனும், ஐந்து புள்ளிகள் இழந்து வங்கதேசம் 70 புள்ளிகளுடன் இருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close