அர்ஜுன் டெண்டுல்கர் பற்றிய ஸ்வாரஸ்ய உண்மைகள்

  நந்தினி   | Last Modified : 09 Jun, 2018 10:32 am

watch-out-interesting-facts-about-arjun-tendulkar

டெண்டுல்கர் என்னும் ஜாம்பவனின் பெயர் மீண்டும் கிரிக்கெட் உலகில் ஆர்ப்பரிக்க துவங்கியிருக்கிறது. இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியை சச்சின் டெண்டுல்கர் விளையாடி ஐந்து வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில், யு-19 அணியில் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் அவர், முன்னாள் கேப்டன் ராகுல் ட்ராவிட் தலைமையின் கீழ் செயல்பட இருக்கிறார். 

அர்ஜுன் டெண்டுல்கர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பின் வருமாறு:-

அர்ஜுனின் வேகம்:

கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், சிறந்த பேட்ஸ்மேனாக களத்தில் நாம் பார்த்ததுண்டு. அவரது மகன் அர்ஜுன், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். ஆல்-ரவுண்டரான அர்ஜுன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25 பேர் கொண்ட யு-19 கிரிக்கெட் வீரர்களுடன் ஒருவராக தரம்சலாவின் முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவருடைய பயிற்சியாளரின்படி, ஒரு மணி நேரத்துக்கு தொடர்ந்து 135 கிமீ வேகத்துக்கு, அர்ஜுனால் பந்துவீச முடியும். அது மிகவும் கடினமானது. 

நிலைத்தன்மைக்கு வெகுமதி:

கடந்த ஆண்டு, ஜேஒய் லேலே போட்டிக்காக மும்பையின் யு-19 அணியில் அர்ஜுன் இடம் பிடித்தார். அவர் மும்பை அணிக்காக யு-14, யு-16 அணியிலும் இடம் பிடித்துள்ளார். 2017-18 சீஸனின் கூச் பெஹர் ட்ராஃபி போட்டியின் போது, அர்ஜுன் (யு-19) ஐந்து போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்தினார். அதில் இரண்டு முறை ஒரே இன்னிங்சில் ஐந்து விக்கெட் கைப்பற்றியதும் அடங்கும். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில், மும்பைக்காக இரண்டு போட்டிகளில் நம்பியா யு-19 அணிக்கு எதிராக விளையாடினார். அவர் நான்கு விக்கெட்கள் வீழ்த்த நம்பியா 49ல் அவுட்டானது.

பயிற்சியாளர்:

அர்ஜுன், பயிற்சியாளர் அதுல் கைக்வாதுடன் எப்போதும் இணைந்து இருப்பார். புனேவை சார்ந்த கைக்வாத், லெவல் 3 பயிற்சியாளராவார். தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருந்து வந்தவரான அவர், பயோ-மெக்கானிக்கில் பிஹெச்டி முடித்தவர். பிரிஸ்பேன் மையத்தில் இவர் வேலை பார்த்த அனுபவம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் மூலம், அர்ஜுனுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். அர்ஜுனுக்கு ஏற்பட்டிருந்த இரண்டு மன அழுத்த முறிவுகளால், அவர் கிரிக்கெட்டை விட்டு (2016-17) சுமார் ஓராண்டு விலகி இருந்தார். கைக்வாதை தவிர, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சுப்ரோடோ பானர்ஜீயுடனும் பயிற்சி எடுத்து கொண்டார் அர்ஜுன்.

அவருடைய கவரும் ஆட்டம்:

அர்ஜுன் பல இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் கிளப்களுடன் அங்கமாக இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர், தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரமின் கவனத்தை பெற்றார். அக்ரம், அர்ஜூனுடன் நேரத்தை செலவிட்டு, அவர் கற்பதில் ஆர்வமுடையவர் என்று கூறினார். 

"இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அல்லது வங்கதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மற்ற சிறுவர்களை போல தான் அர்ஜுன். கிரிக்கெட் மீது அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என்றார் அக்ரம். நான் அவருக்கு ஃபிட்னஸ் பற்றி சில விஷயங்கள் சொன்னேன். மேலும், மணிக்கட்டில் பந்தை நிலைப்படுத்துதல் குறித்தும் விளக்கமளித்தேன் எனவும் அக்ரம் தெரிவித்தார். 

அர்ஜுனின் முன்மாதிரி:

ரசிகர்கள் கிரிக்கெட் உலகின் கடவுளாக கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், அர்ஜுன் கிரிக்கெட்டில் நேசிக்கும் கடவுள் கிடையாதாம். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தான் அர்ஜுனின் முன்மாதிரிகள்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்ந்து பந்துவீசுதல்:

மும்பைக்காக விளையாடி வரும் அர்ஜுன், சமீபத்தில் கேப்டன் விராட் கோலிக்கு, வான்கடே மைதானத்தில் பந்துவீசி பயிற்சி எடுத்த வீடியோ வைரலானது. அவர் லார்ட்ஸில் உள்ள உள்ளரங்க அகாடெமியிலும் பயிற்சி எடுத்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பைர்ஸ்டோவ்க்காக யார்க்கர் வீசிய அவர், ஜானிக்கு காயத்தின் பயத்தை கொடுத்தார். அவர் இந்திய மகளிர் அணிக்காகவும் பந்துவீசி உள்ளார். கடந்த ஆண்டு உலக கோப்பையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்காக பந்துவீசி இருந்தார். அர்ஜுன், 2015ம் ஆண்டு கண்காட்சிக்காக நடத்தப்பட்ட போட்டியில் லெஜெண்ட் வீரர் பிரைன் லாராவையே வீழ்த்தி இருந்தார்.

ஹாரிஸ் ஷீல்டில் அறிமுகம்:

2011ம் ஆண்டு நடந்த ஹாரிஸ் ஷீல்டு தொடரில் தான் அர்ஜுன் அறிமுகமானார். அந்த போட்டியில் தான், சச்சின் - காம்ப்ளியின் 664 ரன் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. இருப்பினும் அர்ஜுன், பேட்டிங்கில் டக்கவுட் ஆகி வெளியேறினார். ஆனால் அது அவரது பந்துவீச்சுக்கு தடையாக இல்லை. அதே போட்டியில் அர்ஜுன், 8 விக்கெட் வீழ்த்தினார். அதனால் அவரது திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி, ஜம்னாபாய் நர்சரி பள்ளிக்கு எதிராக வெற்றி பெற்றது. 

பந்துவீச்சாளராக பேட்டிங்கிலும் அசத்துவார்:

அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்-ரவுண்டர் என்றாலும், அவருடைய முக்கிய பணி பந்து வீசுவது. இருந்தாலும், பேட்டிங்கில் அவர் மந்தமானவர் கிடையாது. இந்த ஆண்டு துவக்கத்தில், ஆஸ்திரேலியாவில் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் குளோபல் சேலஞ் போட்டியில், கிரிக்கெட்டர்ஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் இடம் பெற்றார். அப்போது ஹாங்காங் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான டி20 போட்டியில் அவரது ஆல்-ரவுண்டர் ஆட்டத்தை அசத்தலாக வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 48 ரன் அடித்த அவர், நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். 

முதல் சதம்:

எப்போதும் டெண்டுல்கருக்கும் 'செஞ்சுரி'-க்கும் ஏழாம் பொருத்தம் என்று உச்சரிக்கப்பட்டதே அதிகம். ஆனால், தனது 13 வயதில், 2012ம் ஆண்டில், அர்ஜுன் யு-14 அணியில் இடம் பிடித்திருந்த போது, முதல் சதத்தை பதிவு செய்தார். 124 ரன்கள் விளாசினார். 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரும் அதில் அடங்கும். இதனால் அவருடைய கர் ஜிம்கானா, கோரிகோன் அணியை இன்னிங்ஸ் மற்றும் 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அதிரடி ஆட்டம், இந்தியாவுக்காக சச்சின் தனது 100-வது சதத்தை நிறைவு செய்து இரண்டு மாதங்களுக்கு பின் இடம் பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close