ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 01:02 pm
india-beats-pakistan-to-reach-women-s-asia-cup-2018-final

பாகிஸ்தானை வீழ்த்தி மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி. 

மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 போட்டியில், இன்று நடந்த நாக்கவுட் சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 72/7ல் சுருண்டது. இந்தியாவின் ஏக்தா பிஷ்த் 14 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட-நாயகன் விருதை பிஷ்த் பெற்றார். 

இதை அடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 38 ரன், ஹர்மான்ப்ரீத் கவுர் 34 ரன் எடுத்து எளிதில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். இவர்களுக்கு முன் களமிறங்கிய மித்தாலி ராஜ் - தீப்தி சர்மா இணை ஆட்டத்தை பெரிதாக கொண்டு செல்லவில்லை. 5 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்தியாவை மந்தனா- கவுர் இணை மீட்டெடுத்தது. இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் இந்தியாவின் நான்காவது வெற்றி இதுவாகும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close