யோ-யோ டெஸ்ட்: தோல்வி அடைந்தால் வீரர்கள் நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 03:54 pm

indian-players-will-be-dropped-after-failing-in-the-yo-yo-test-says-report

யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடையும் இந்திய வீரர்கள், தேசிய அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, யோ-யோ டெஸ்ட், அனைத்து வீரர்களுக்கும் கட்டாயம் என்று தெரிவித்தார். அதன்படி அந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்கப்படவில்லை. 

தற்போது வெளியாகியுள்ள செய்தியின்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, வீரர்கள் யோ-யோ டெஸ்ட்டில் ஈடுபட உள்ளதாகவும், அதில் அவர்கள் தோல்வி அடைந்தால், தேசிய அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த வாரம் இந்த டெஸ்ட் நடத்தப்படும் நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள், வரும் 15ம் தேதி யோ-யோ டெஸ்ட்டில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 14ம் தேதி தொடங்குகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் சுற்றுப்பயணம் ஜூலை 3ம் தேதி துவங்க இருக்கிறது.

சுரேஷ் ரெய்னா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்திருந்தார். அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close