மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்த நியூசிலாந்து மகளிர் அணி

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 05:03 pm
new-zealand-women-scores-highest-total-ever-across-genders

டப்லினின் ஒய்.எம்.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து மகளிர் அணி, மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான 50 ஓவர் போட்டியில் பங்கேற்று வரும் நியூசிலாந்து, 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் (ஆண்கள் அல்லது மகளிர்) நிர்ணயிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 1996-97ம் சீசனுக்கான ஒருநாள் போட்டியின் போது, நியூசிலாந்து மகளிர் அணி, கிறிஸ்ட்சர்ச்சில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் இழப்பிற்கு 450 ரன் எடுத்திருந்தது. 2016ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜில், பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆண்கள் அணி, 3 விக்கெட் இழந்து 444 ரன் எடுத்தது. 

425 ரன்னுக்கு மேல் குவித்த அணிகள்:-

ஸ்கோர் அணி எதிரணி இடம் ஆண்டு
490/3 நியூசிலாந்து மகளிர் அயர்லாந்து மகளிர் டப்லின் 2018
455/5 நியூசிலாந்து மகளிர் பாகிஸ்தான் மகளிர் கிறிஸ்ட்சர்ச் 1996-97
444/3 இங்கிலாந்து பாகிஸ்தான் ட்ரெண்ட் பிரிட்ஜ் 2016
443/9 இலங்கை நெதர்லாந்து ஆம்ஸ்டெல்வீன் 2006
438/9 தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஜோஹன்னஸ்பர்க் 2005-06
438/4 தென் ஆப்பிரிக்கா இந்தியா மும்பை 2015-16
434/4 ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ஜோஹன்னஸ்பர்க் 2005-06

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close