கடைசி பந்தில் இந்தியாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றனர் வங்கதேச பெண்கள்!

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 05:57 pm
bangladesh-eves-beat-india-to-win-asia-cup

ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடரில், இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது.

6 முறை தொடர்ந்து ஆசிய கோப்பை டி20 சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இன்று வங்கதேசத்துடன் இறுதி போட்டியில் மோதியது. முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங்(56) அரைசதம் அடித்தார்.

120 ரன்களை இலக்காக கொண்டு இறங்கிய வங்கதேசம், சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இலக்கை நெருங்கி வந்த நேரத்தில், 19வது ஓவரை சிறப்பாக வீசிய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்மன்ப்ரீத் பந்துவீசி முதலில் ஒரு பவுண்டரி கொடுத்தார். ஆனால், அதன்பின் 2 விக்கெட்களை வீழ்த்தி கடைசி பந்துவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, ருமானா அஹ்மத் வெற்றிக்கனியை வங்கதேசத்துக்கு பறித்துக் கொடுத்தார். 22 பந்துகளில் 23 ரன்கள் அடித்த அவர் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகர் சுல்தானா 27 ரன்கள் அடித்து அவுட்டானார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close