முதல் டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 12:49 pm

west-indies-beats-sri-lanka-by-226-runs-in-first-test-match

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ். 

இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 414 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 7 விக்கெட் இழந்து 223 ரன் சேர்ந்திருந்த போது, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் இலங்கைக்கு 453 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை கொண்டு களமிறங்கிய இலங்கை 226 ரன்னுக்கு ஆல்-அவுட்டானதால், 226 ரன் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close