ஒன்றரை மாத ஓய்வில் ஆண்டர்சன்; இந்திய தொடரில் பங்கேற்பாரா?

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 02:01 pm
injured-james-anderson-ruled-out-from-england-squad

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (35), ஒன்றரை மாத ஓய்வில் செல்கிறார். இதனால், இந்திய தொடரில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் பலமாக இருக்கும் இருக்கும் ஆண்டர்சன், கடந்த ஓராண்டாக சிறந்த ஃபார்மில் இருக்கிறார். 138 டெஸ்ட் போட்டிகளில் 540 விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார். இவர், அடுத்து நடக்க இருக்கும் நான்கு நாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

நீண்ட நாட்களாக அவருக்கு இருக்கும் தோள்பட்டை காயம் காரணமாக, அடுத்த ஆறு வாரங்களுக்கு ஆண்டர்சன் ஓய்வு எடுக்க உள்ளார். புனர்வாழ்வு மையத்தில் தனது ஓய்வு காலத்தை செலவிட இருக்கும் ஆண்டர்சன், இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குள் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட அவர் முழு தகுதியுடன் உள்ளாரா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் போட்டிக்காக அவர் முழு உடற்தகுதி பெற வேண்டியது அவசியமாகும் என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். காயம், ஓய்வு  காரணமாக ஆன்டர்சனால் முழு தகுதி பெற முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் குறைந்துள்ளது என்பதே உண்மை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close