இலங்கை தொடருக்கான தெ. ஆ. அணி: டேல் ஸ்டெய்ன் இணைப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 05:05 pm

dale-steyn-named-in-south-africa-test-squad-ahead-for-sri-lanka-tour

இலங்கை டெஸ்ட் தொடருக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏபி டி வில்லியர்ஸின் ஓய்வுக்கு பிறகு, தென் ஆப்பிரிக்காவின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். அடுத்த மாதம் இலங்கை செல்ல இருக்கும் தென் ஆப்பிரிக்கா, இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. தற்போது இலங்கைக்கு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், உலகின் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இடம் பெற்றுள்ளார். 

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த ஸ்டெய்ன், சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். தற்போது கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஸ்டெய்ன், தனது உடற்தகுதியை நிரூபித்துவிட்டதாக தெரிகிறது. பேட்ஸ்மேன் மற்றும் லெக்-பிரேக் பௌலர் ஷான் வோன் பெர்க், முதல் சர்வதேச போட்டிக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

ஜூலை 12ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 20ந் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் துவங்குகிறது. 

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: பாப் டு பிளேஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, தெம்பா பவுமா, குயின்டன் டி காக், தேயூனிஸ் டி ப்ருயன், டீன் எல்கர், ஹெய்ன்ரிச் க்ளாஸென், கேஷவ் மகாராஜ், ஏதேன் மார்க்ரம், லுங்கிசனி ன்கிடி, வெர்னோன் பிளந்தார், காகிஸோ ரபாடா, டாப்ராஸ் ஷம்சி, டேல் ஸ்டெய்ன், ஷான் வோன் பெர்க்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close