நான் இங்கு இருக்க காரணம் கம்பிர்- உணர்ச்சிவசப்படும் நவ்தீப் சைனி

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 12:28 pm

navdeep-saini-get-emotional-whenever-he-speaks-about-gautam-gambhir

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிரை பற்றி பேசினாலே உணர்ச்சிவசப்படும் நவ்தீப் சைனி. 

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமி, யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் உள்ளூர் கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி, ஷமிக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது சைனிக்கு முதல் டெஸ்ட் போட்டியாகும். 

டெல்லியைச் சேர்ந்த சைனி, 2013ம் ஆண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஞ்சி அணிக்காக ரெட்-பாலில் பந்து வீசி இருந்தார். அதன் பிறகு, இப்போது தான் அந்த ரெட்-பாலை எந்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன் சைனி, டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்று, நாளுக்கு 250 முதல் 500 ருபாய் வரை வாங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை மீட்டது, ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்த கவுதம் கம்பிர் தான். 

இது குறித்து சைனி கூறுகையில், "கம்பிர் (பையா), நான் டென்னிஸ் பந்தை வைத்து எவ்வாறு செயல்பட்டேனோ, அப்படியே பந்தை வீச சொன்னார். அதில் அனைத்தும் வீழ்ந்து விடும் என்றார். அவர் கூறியது போல செயல்பட்டதினால் தான் தற்போது நான் இந்த இடத்தில் இருக்கிறேன். எப்போதெல்லாம் நான் கம்பிரை பற்றி பேசுகிறேனோ, அப்போது நான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். அது ஏன் என்று எனக்கே தெரியாது. 

நான் சின்ன விஷயங்களை கூட நியாபகம் வைத்துள்ளேன். கம்பிர் எனக்காக தேர்வுக்குழு உறுப்பினர்களிடம், டெல்லி அணிக்காக நான் சிறப்பாக செயல்படுவேன் என்று ஆதரவு தெரிவித்து பேசுவார். ஆஷிஷ் நெஹ்ரா, மிதுன் மன்ஹாஸ், சுமித் நார்வால் ஆகியோரும் எனக்கு துணையாக இருந்துள்ளனர். அவர்களையும் மறந்திட முடியாது. 

என்னுடைய சில போட்டிகளை பார்த்த கம்பிர், பயிற்சி ஆட்டத்தில் கடுமையாக உழைத்தால் நீ இந்திய அணிக்காக விளையாடலாம் என்று கூறினார். நான் என்னை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், கம்பிர் தெரிந்து கொண்டார். இப்பொது என்னுடைய நாட்களை நான் திரும்பி பார்க்கும் போது, சிரிப்பேன்.

இந்திய ஏ அணிக்காக விளையாடிய போது, ராகுல் டிராவிட் எனக்கு மாறுபட்ட நிலைத்தன்மை குறித்து பல மதிப்புமிக்க டிப்ஸ்களை வழங்கினார். அதே போல், ஆர்.சி.பி அணிக்காக செயல்பட்ட நேரத்தில், ஆஷிஷ் நெஹ்ராவுடன் பணியாற்றியது எனக்கு உதவிகரமாக இருந்தது" என்றார். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் சுதந்திர போராட்டத்தில் ஒரு அங்கமாக இருந்தவர் சைனியின் தாத்தா. அவரை பற்றி சைனி, "தாதாஜிக்கு கிட்டத்தட்ட 100 வருடங்களாக போகிறது. இருப்பினும் நேதாஜி குறித்த கதைகளை சொல்வதில் உற்சாகமாக காணப்படுவார். பிறகு, என்னுடைய போட்டிகளை தவறாமல் டிவி-ல் பார்த்துவிடுவார்" என்று தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close