டி20 தரவரிசை: இந்தியாவின் பூனம் யாதவ் டாப் 3க்கு முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 02:57 pm

poonam-anam-break-into-top-5-in-women-s-t20-rankings

ஐசிசி-ன் மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பூனம் யாதவ் மற்றும் பாகிஸ்தானின் அனம் அமின் டாப் 5-க்குள் முன்னேறி இருக்கின்றனர். 

ஆசிய கோப்பை டி20 போட்டியில் மகளிர் அணிகளின் சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு, புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்தியாவின் பூனம் யாதவ், இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்சுட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் லெய்க் காஸ்பெர்க் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானின் அமின், 13 இடங்கள் ஏற்றம் கண்டு, ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார். 

போட்டியில் ஆட்ட-நாயகன் விருது பெற்ற வங்கதேசத்தின் ருமானா அஹ்மத், ஆல்-ரவுண்டர்களில் 6 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும், 20-வது இடத்திற்குள் இவர் நுழைந்தார். 

காதிஜா துல் குப்ரா, பந்துவீச்சில் 6 இடங்கள் ஏறி 13-வது இடத்தை எட்டினார். நஹிதா அக்தர் 22 இடங்கள் ஏறி 40-ல் இருக்கிறார். 

பேட்ஸ்மேன் தரவரிசையில், தொடர்-நாயகன் விருது பெற்ற இந்தியாவின் ஹர்மான்ப்ரீத் கவுர், ஒரு இடம் ஏற்றதால் 7-வது இடத்தை பிடித்தார். ஸ்மிரிதி மந்தனா, இரண்டு இடம் கீழிறங்கி 9-வது இடத்தில் உள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close