தாடிக்கு இன்சூரன்ஸ்: ஃபிலிப்ஸ் இந்தியாவின் பிராண்ட் அம்பாஸடரானார் கோலி

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 03:50 pm

virat-kohli-becomes-brand-ambassador-for-philips-india

ஃபிலிப்ஸ் இந்தியாவின் பிராண்ட் அம்பாஸடராக இந்திய கேப்டன் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்திய சீனியர் கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கு என்று ஒரு தனி ஸ்டைல் உள்ளது. பேட்டிங்கை போல் ஸ்டைலிலும் கலக்குவார். அதே போல் அவருக்கும், அவருடைய தாடிக்கும் உள்ள காதல் பற்றியும் நாம் அறிவோம். தனது தாடியையும் விதவிதமான ஸ்டைலில் மாற்றுவார். ஒருமுறை ஜடேஜாவின் 'பிரேக்கிங் தி பியர்ட்' சேலஞ்சுக்கும் அவர் மறுத்துவிட்டார். 

அண்மையில் கூட அவரது தாடியை அவர் இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தனர். இந்திய வீரர் கே.எல். ராகுலும், தனது ட்விட்டர் பக்கத்தில், கோலியின் தாடி அளவு எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, கோலியை கிண்டல் செய்திருந்தார்.   

இந்த நிலையில், அந்த செய்தியை விராட் கோலியே உறுதி செய்திருக்கிறார். அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் ஃபிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக, விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் ஃபிலிப்ஸ் டிரிம்மர்ஸ் பிடி 3000-ஐ அறிமுகம் செய்ய இருக்கும் விராட் கூறுகையில், "ஃபிலிப்ஸுடன் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் நான் நேசிக்கும் தாடி கச்சிதமான ஸ்டைலில் இருக்க விரும்புவேன்" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close