ஜிம்பாப்வே கிரிக்கெட் இயக்குனரை இடைநீக்கம் செய்தது ஐசிசி

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 04:28 pm

icc-suspends-zimbabwe-cricket-director-enock-ikope-for-corruption-charges

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஏனோக் இக்கோப்பை இடைநீக்கம் செய்துள்ளது. 

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய இயக்குனர் இக்கோப், ஊழல் குற்றச்சாட்டுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ஹராரே மெட்ரோபொலிட்டன் கிரிக்கெட் சங்கத்தின் (ஹெச்.எம்.சி.ஏ) தலைவராக 2015ம் ஆண்டு முதல் இருக்கும் இக்கோப், ஐசிசி-யிடம் தண்டனை பெறும் இரண்டாவது ஹெச்.எம்.சி.ஏ நிர்வாகி ஆவார்.  

ஹெச்.எம்.சி.ஏ-வின் பொருளாளர் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனரான ராஜன் நாயர், கடந்த ஆண்டு சர்வதேச போட்டியை பிக்ஸ் செய்ய, ஜிம்பாப்வே கிரிக்கெட் கேப்டன் க்ரேமே கிரேமருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார். சூதாட்டத்தில் ஈடுபட்ட நாயரை, கடந்த மார்ச் மாதம் ஐசிசி, 20 வருடங்களுக்கு தடை செய்தது.

இதே குற்றச்சாட்டில் தான் இக்கோபும் சிக்கி இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாகவில்லை. ஜூன் 11ம் தேதி முதல் 14 நாட்களுக்குள், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க ஐசிசி, இக்கோபுக்கு அவகாசம் கொடுத்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close