• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டிய உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 05:26 pm

adam-gilchrist-praises-england-s-wicket-keeper-sarah-taylor

உலகின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை சாரா டெய்லரை புகழ்ந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி 9ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்தை, 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. இருப்பினும் இப்போட்டியில் இங்கிலாந்தின் சாரா டெய்லர், தனது சிறந்த விக்கெட் கீப்பிங்கால் அனைவரது கவனத்தையும் பெற்றார். 

தென் ஆப்பிரிக்காவின் சுன்னே லூஸை, சாரா டக்கவுட்டாக்கி வெளியேற்றினார். 0.6 விநாடிகளில் அவர் விக்கெட் எடுத்தார். இதன் மூலம் பலரது பாராட்டுகளை பெற்ற சாரா, தலைச்சிறந்த விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்டின் வாழ்த்தையும் பெற்றார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகின் சிறந்தவர்' என்று சாராவை குறிப்பிட்டார்.  

உலகில் உள்ள சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவராக இருக்கும் இந்தியாவின் தோனிக்கு, கில்கிறிஸ்ட் மிகவும் பிடித்தமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close