• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

எனது இடத்தை தோனியிடம் இழந்தேன்- தினேஷ் கார்த்திக்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 06:21 pm

i-lost-my-place-to-a-special-player-called-dhoni-says-dinesh-karthik

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி இருக்கும் போது, இந்திய கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் இருப்பது மிகவும் கடினமானது தான். 

2010ம் ஆண்டுக்கு பிறகு, தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 87 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட பின் கார்த்திக் களமிறங்க இருக்கிறார். இதன் மூலம் பார்திவ் படேலையும் முந்தியுள்ளார் கார்த்திக். பார்திவ், 83 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றார். தினேஷ் கார்த்திக், 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 

இந்திய டெஸ்ட் அணியில் நிலையான ஃபார்மில் இல்லாத காரணத்தினால் கார்த்திக், டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கக்கட்டப்பட்டார். தவிர, கீப்பர்-பேட்ஸ்மேன் வேலையை தோனி கச்சிதமாக செய்து வந்த காரணத்தினாலும் கார்த்திக், அணிக்கு தேவையாக இல்லை. 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, கார்த்திக் மீண்டும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி அடைந்தார். அந்த இடத்தில் வ்ரிதிமான் சாஹா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது காயம் தான் கார்த்திக்கை, டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற வைத்துள்ளது. 

இது குறித்து பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

"உண்மையை சொன்னால், நான் அணிக்காக போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை. ஒரு நிலையான வீரராக இல்லை. அந்த போட்டி மிகுந்த சுற்றுசூழலில், தோனி என்பவரும் சுவாசித்துக் கொண்டிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இந்தியா, ஒரு தலைச்சிறந்த கேப்டனை உருவாக்கியுள்ளது. 

இதனால், நான் ஒரு சாதாரணமான வீரரிடம் எனது இடத்தை இழக்கவில்லை; தோனி மிகவும் ஸ்பெஷல். அவரை நான் அதற்காகவே மதிக்கிறேன். அந்த சமயத்தில் எனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள நான் போதுமான திறனை வெளிப்படுத்தவில்லை. நான் எனக்காக உண்மையாக இருக்க வேண்டும். இப்போது எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நான் சிறப்பாக செயல்பட முழு முயற்சி செய்வேன். இன்று, நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close