சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது பெற்றார் விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 11:22 am

virat-kohli-receives-polly-umrigar-at-bcci-annual-awards

இந்திய கேப்டன் விராட் கோலி, சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை பெற்றார். 

பெங்களுருவில் நடைபெற்ற பிசிசிஐ ஆண்டு விழாவில், கேப்டன் கோலி, 2016-17 மற்றும் 2017-18 சீசனுக்கான, சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை பெற்றார். 2016-17 சீசனில் கோலி, 13 போட்டிகளில் 1332 ரன் அடித்தார். சராசரி 74. குறுகிய ஓவர் போட்டியில், 27 இன்னிங்ஸ்களில் 1516 ரன் அடித்தார். சராசரி 84.22. 2017=18 சீசனில், 6 டெஸ்ட் போட்டிகளில் 896 ரன் எடுத்தார். சராசரி 89.6. ஒருநாள் போட்டிக்கான சராசரி 75. 

2017-18 ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதை, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா பெற்றார். 2016-17 ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருது ஹர்மான்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்டது. 

சர்வதேச வீரர்களை தவிர, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களும் விருதுகளை பெற்றனர். ஜலேஜ் சக்சேனா, பர்வேஸ் ரசூல், க்ருனால் பாண்டியா ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது பெற்றிருந்தனர். 

முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். இதன் மூலம், இந்த விழாவில் துவக்க உரையாற்றும் முதல் இந்தியன் அல்லாத கிரிக்கெட் வீரர் என்ற பெயரை பெற்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close