என் வாழ்வை மாற்றிய ஸிவா- மகளுக்காக உருகும் தோனி

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 11:22 am

dhoni-speaks-about-how-daughter-ziva-s-birth-changes-his-life

தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டு ஆண்டுக்கு பிறகு களமிறங்கிய மூன்றாவது ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம், மூன்றாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை, ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு கைப்பற்றிய இரண்டாவது கேப்டன் என்ற பெயரை தோனி பெற்றார். 

இந்த ஐ.பி.எல் சீசன் முழுவதும் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களுடன் அவர்களது குடும்பமும் போட்டியில் கலந்து கொண்டது. முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் குடும்பம் ஒன்றாகவே நேரத்தை செலவிட்டது. அவர்களது குழந்தைகள் ஒன்றாக விளையாடியது, மனைவிகள் மைதானத்தில் சேர்ந்து போட்டியை ரசித்தது என பல புகைப்படங்கள், வீடியோக்கள் நம்மை கவர்ந்தன. 

இதில், தோனியின் மகள் ஸிவா அனைவரையும் விட ஓவர்டேக் செய்து ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்தார். ஒவ்வொரு ஐ.பி.எல் போட்டி முடிவுக்கு பிறகு, தோனி மற்றும் ஸிவா, மைதானத்தில் அடிக்கும் லூட்டி ரசிகர்களை ரசிக்க வைத்தது. 

இந்த நிலையில், மகள் ஸிவா தனது வாழ்வை மாற்றியதாக தோனி கூறுகையில். அவர் பேசுகையில், "ஒரு கிரிக்கெட் வீரராக நான் மாறியிருக்கிறேனா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், ஒரு மனிதராக நான் மாற்றியுள்ளேன். அதற்கு காரணம் என்னுடைய மகள். எப்போதும் தந்தைக்கு மகள்கள் தான் நெருக்கமானவர்கள். என்னுடைய விஷயத்தில் என்ன பிரச்னை என்றால், ஸிவா பிறக்கும் போது நான் அருகில் இல்லை. பெரும்பாலான நேரங்களில் நான் போட்டிகளில் பங்கேற்றேன். அதனால் அது மோசமாக அமைந்தாலும், அதனை சமாளித்தேன். 

ஸிவாவுடன் அற்புதமான நேரத்தை செலவிட்டேன். ஐ.பி.எல்-ன் ஒட்டுமொத்த போட்டியிலும் ஸிவா என்னுடன் இருந்தாள். என்னிடம் அவளுடைய மிகப்பெரிய கோரிக்கையாக இருந்தது என்னவோ, தான் மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான். அது அவளுக்கு புல்வெளி. மேலும், அணியில் பல குழந்தைகள் இருந்தன.  

நான் ஒரு 1.30, 2.30, 3 மணியளவில் தூங்கி எழுவேன். ஸிவா, 8.30 அல்லது 9 மணியளவில் எழுந்து, காலை உணவை முடித்துவிட்டு, அனைவருடனும் விளையாட ஆரம்பிப்பாள். குழந்தைகள் விளையாடுவது எங்களுக்கு மன அமைதியை தரும்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close