வெ.இ டூர்: இலங்கையின் மேத்தியூஸ், லஹிரு பாதியில் விலகல்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 03:04 pm

angelo-mathews-and-lahiru-gamage-to-return-home-from-west-indies-tour

வெஸ்ட் இண்டீசில் இருந்து இலங்கையின் ஏஞ்சலோ மேத்தியூஸ் மற்றும் லஹிரு காமேஜ் நாடு திருப்புகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை, வெஸ்ட் இண்டீஸ் வென்றது. நாளை (ஜூன் 14) இரண்டாவது டெஸ்ட் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், இலங்கையின் முன்னணி வீரர்கள் மேத்தியூஸ் மற்றும் காமேஜ், நாடு திரும்பியுள்ளனர். 

முதல் டெஸ்ட் போட்டியின் போது, காமேஜூக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் மேத்தியூசுடன் அவர் நாடு திரும்புகிறார். 

பல மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த மேத்தியூஸ், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் அவர் இத்தொடரில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இவர்களின் விலகளால் தசுன் ஷனகா மற்றும் தனுஸ்கா குணதிலகா, வெஸ்ட் இண்டீசுக்கு பறந்துள்ளனர். ஆனால் இவர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தேர்வாக பார்க்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை வாரியம் தெரிவித்துள்ளது. 

மேத்தியூசுக்கு பதில் தனஞ்ஜய டி சில்வா மற்றும் மஹேல உதவாட்டா களமிறங்க அணியில் இருக்கின்றனர். பந்துவீச்சு பொறுப்பை காமேஜூக்கு பதில் கசுன் ரஜிதா மற்றும் அசிதா பெர்னாண்டோ பார்த்துக் கொள்வார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close