யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்?

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 05:08 pm

ravi-shastri-increased-yo-yo-test-mark-for-players

இந்திய வீரர்களுக்கான யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை உயர்த்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நாளை (ஜூன் 14) இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டியின் எதிர்பார்ப்பை பல இளம் வீரர்கள் எகிற வைத்துள்ளனர். அதில் முக்கியமானவராக ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்கானிஸ்தான் போட்டிக்காக இந்திய அணி பிஸியாக இருக்கும் அதே நேரத்தில், முத்தரப்பு தொடருக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியும் பரபரப்பாக காணப்படுகிறது. வருகிற 17ம் தேதி பயிற்சி ஆட்டத்துடன் தொடரை தொடங்க இருக்கிறது இந்திய ஏ அணி. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும் இந்திய ஏ அணி விளையாடுகிறது. 

இதற்கிடையே, யோ-யோ டெஸ்ட் விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த காரணத்தினால், இந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய சீனியர் அணியில் இருந்து ஷமி நீக்கப்பட்டனர். யோ-யோ டெஸ்டின் மதிப்பெண் 16.1. இந்த மதிப்பெண்ணை வீரர்கள் எடுக்காவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படுவர். இதனால் நீக்கப்பட்ட சாம்சனுக்கு பதில் இஷான் கிஷான் மற்றும் ஷமிக்கு பதில் சைனி அணியில் இடம் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வீரர்களுக்கு கடுமையான உடற்தகுதி பலப்பரீட்சையை வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை 16.1ல் இருந்து 16.3க்கு உயர்த்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 

எதிர்காலத்தில் சவால் அளிக்கக்கூடிய சுற்றுப்பயணங்கள் மற்றும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு வீரர்களின் உடற்தகுதி பரிட்சியை கடுமையாக்கி இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வீரர்களும் இந்த டெஸ்டில் தேர்ச்சியடைய வேண்டும் என்றும் சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close