இந்திய வீரர்களின் தனித்தன்மை வாய்ந்த சாதனைகள்!

  நந்தினி   | Last Modified : 14 Jun, 2018 05:47 pm

watch-out-unique-records-of-indian-players-in-cricket-history

உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும் போட்டிகள் அதிகம் இருக்கின்றன. ஆனால், ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் போட்டியாக கிரிக்கெட் மட்டுமே டாப்பில் உள்ளது. இந்த விளையாட்டில் போட்டிகள் இருக்கும் அதே நேரங்களில், சாதனைகள் நிகழ்த்தப்படுவதும், முறியடிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக இருக்கிறது. 

இதில் சில வீரர்களின் சாதனைகளை முறியடிக்கவே முடியாத நிலை இருக்கும். சில வீரர்களின் சாதனைகளை எளிதில் முறியடித்து விடலாம் என்றாலும் கூட அந்த சாதனைகள் இன்னும் முறியடிக்க முடியாமல் இருக்கின்றன. அதில் ஒருசில வீரர்கள் நிகழ்த்திய மிகவும் தனித்துவமான சாதனைகளும் கிரிக்கெட் உலகில் உள்ளன. அந்த சாதனைகளின் பட்டியல் பின் வருமாறு:-

அதிக முறை பந்துவீசிய விக்கெட் கீப்பர் தோனி:

கிரிக்கெட் வரலாற்றில் தோனி பெயர் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் யாரும் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு பேட்ஸ்மேன், கேப்டனாக அவர் நம்மை அசரவைத்த அதே சமயம், அவரது மின்னல் வேகா விக்கெட் கீப்பிங்கிலும் நம்மை கவர்ந்திருக்கிறார். இத்தனை பரிணாமங்களை நமக்கு காட்டிய தோனி, அதில் பல சாதனைகளை  படைத்துள்ளார் என்பது அறிந்ததே. இது தவிர பௌலிங்கிலும் அவர் சாதனை படைத்திருக்கிறார். 

இது பல பேருக்கு ஷாக் நியூஸாக இருந்தாலும், அது தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. ஒரு விக்கெட் கீப்பராக தோனி, 9 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசியுள்ளார். மொத்தம் 132 பந்துகளை அவர் வீசியிருக்கிறார். அதில் ஒரு விக்கெட்டையும் அவர் எடுத்துள்ளார். 2009ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிராவிஸ் டௌலினின் விக்கெட்டை தோனி வீழ்த்தி இருந்தார். ஒரு விக்கெட் கீப்பராக இருந்து அதிக முறை பந்து வீசிய வீரர் என்றால் அது தோனிதான்.

சிக்கனமான பந்துவீச்சாளர் பாபு நட்கர்னி:

இந்தியாவின் 'சிக்கனமான பந்துவீச்சாளர்' என்று அழைக்கப்படுபவர் பாபு நட்கர்னி. 1964ம் ஆண்டு சென்னையில், இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஓவரில் பந்துவீச வந்த இவர், தொடர்ச்சியாக 21 ஓவர்கள் வீசி ஒரு ரன்னையும் விட்டுக்கொடுக்கவில்லை. மொத்தம் 114 நிமிடங்கள் களத்தில் நின்று 131 பந்துகள் வீசியுள்ளார். 

இப்போது புரிந்திருக்கும் இவரை ஏன் சிக்கனமான பந்துவீச்சாளர் என குறிப்பிடுகிறார்கள் என்று. இந்த தனித்துவமான சாதனையை இனி யார் நிகழ்த்த போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த காலத்திலேயே சில வீரர்கள் இப்படியான சாதனைகளை புரிந்துள்ளனர். 

4 பந்துகள் கொண்ட ஓவர் கிரிக்கெட்டில் 23 ஓவர்கள் இப்படி மெய்டன் ஓவர் வீசப்பட்டுள்ளது. வீசியவர் ஆல்ஃப்ரெட் ஷா, நார்த் - சௌத், நாட்டிங்காம், 1876. 

5 பந்துகள் ஓவர் : 10 - எர்னி ராப்சன், சோமர்செட் - சஸெஸ், ஹொவ், 1897

6 பந்துகள் ஓவர் : 21 - பாபு நட்கர்னி, இந்தியா - இங்கிலாந்து, மெட்ராஸ், 1963-64

8 பந்துகள் ஓவர் : 14 - ஹக் டேபீல்டு, தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து, டர்பன், 1956-57

முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த இர்ஃபான் பதான்:

கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் என்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. அதனை ஒரு போட்டியில் படைத்தாலும், அது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் களமிறங்கிய முதல் ஓவரிலேயே சாதனை என்றால், அவர் கொண்டாடப்பட வேண்டிய வீரர் தான். இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் அப்படி தான் கொண்டாடப்பட்டார். 

2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஓவரில் இறக்கப்பட்ட இர்ஃபான் பதான், ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். யாரும் முறியடிக்க முடியாத சாதனையாக இது உள்ளது. இதை படைத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் தான் என்று சொல்லிக் கொள்ள இந்தியாவும் பெருமை அடைகிறது. 

முதல் ஓவரின் 4-வது பந்தில் சல்மான் பட், 5-வது பந்தில் யூனிஸ் கான் மற்றும் கடைசி பந்தில் முகமது யூசபை வீழ்த்தி, முதல் ஓவரில் 0/3 என பாகிஸ்தானை தடுமாறச் செய்தார். ஆனால், துரஷிஷ்டவசமாக இந்தியா, அப்போட்டியில் தோல்வி அடைந்தது. 

ரோஹித் சர்மா - ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதம்:

குறுகிய ஓவர் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் பெரும்பாலும் அதிரடியாகவே இருக்கும். ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்டிருக்கும் ஏழு இரட்டை சதங்களில் ரோஹித் மூன்றை அடித்திருக்கிறார். அவருடைய முதல் இரட்டை சதம், 2013ம் ஆண்டு பெங்களுருவில் சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது. 209 ரன் அடித்த அவர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்தர் சேவாக்குடன் இணைந்தார். 

இரண்டாவது இரட்டை சதம், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக அமைந்தது. 264 ரன் அடித்தார். ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட அதிக ரன்னாக இன்றளவும் இருக்கிறது. 

அவருடைய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் இரட்டை சதம், 2017ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, இலங்கைக்கு எதிராக வந்தது. 153 பந்துகளில் 208 ரன்களை அவர் பறக்கவிட்டிருந்தார்.

சச்சின் - அதிக சர்வதேச சதங்கள்:

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவன் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், அதிக சர்வதேச சதங்கள் அடித்த பட்டியலில் டாப்பில் இருப்பவர். 2012ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக அவர் தனது சதத்தில், சதமடித்தார். 100 சர்வதேச சதங்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின், இந்த தனித்துவமான சாதனையை யார் முறியடிக்க போகிறார்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close