ஆப்கானிஸ்தான் அணிக்கு மோடி வாழ்த்து

  Newstm News Desk   | Last Modified : 14 Jun, 2018 09:47 am

modi-afghan-president-wishes-debut-test-team

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான்  அணிக்கு பிரதமர் போட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் அணியை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். அதில், “ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுவதை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன். இதுபோன்ற விளையாட்டுக்கள் தொடர்ந்து இரு நாட்டு மக்களிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டிக்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் பிரதமர்,  “இந்தியாவிற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி” என்றார்.

இன்றைய போட்டியை காண மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வந்திருந்தார். மெலும் பிசிசிஐயின் சிஇஓ உடன் இருந்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close