இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் புள்ளி விவரங்கள்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 11:41 am
statistical-preview-of-india-and-afghanistan-s-only-historic-test-match

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. ஜூன் 14ம் தேதி, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தேதியாக அமைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியிக்கான முக்கிய புள்ளி விவரங்கள் பின் வருமாறு:-

1- முதல் முறையாக இந்திய அணி, சொந்த மண்ணில் ஜூன் மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 

4- பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடும் நான்காவது அணி ஆப்கானிஸ்தான். 

12- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 12-வது அணி ஆப்கானிஸ்தான். 

87- இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், தொடர்ச்சியாக 87 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். 2010ம் ஆண்டு கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக அவர் அணியில் இடம் பெற்றிருந்தார். அதிக போட்டிகளில் பங்கேற்காத இந்திய வீரர் கார்த்திக் ஆவார். 

அதிக போட்டிகளை தவறவிட்ட வீரர்கள்:-

காரெத் பட்டி (இங்கிலாந்து) - 142  (2005 - 2016)

மார்ட்டின் பிக்கனில் (இங்கிலாந்து) Martin Bicknell (ENG) - 114  (1993 - 2003)

பிலாய்ட் ரெய்ப்ர் (வெஸ்ட் இண்டீஸ்) - 109  (1999 - 2009)

யூனிஸ் அஹ்மத் (பாகிஸ்தான்) - 104  (1969 - 1987)

டெரெக் ஷாக்களேதான் (இங்கிலாந்து) - 103 (1951 - 1963)

லெஸ் ஜாக்சன் (இங்கிலாந்து) - 96 (1949 - 1961)

தினேஷ் கார்த்திக் (இந்தியா) - 87 (2010 - 2018)

99- டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உமேஷ் யாதவ் 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால், 100 விக்கெட் எடுத்த 8-வது வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒட்டுமொத்தமாக 22-வது பந்துவீச்சாளர் என்ற பெயரை பெறுவார்.

2883- கேப்டன் அஜின்க்யா ரஹானேவுக்கு, டெஸ்ட் போட்டியில் 3000 ரன்னை தொட, இன்னும் 117 ரன் தேவைப்படுகிறது. இதை எட்டினால், 3000 ரன் அடித்த 22-வது இந்திய வீரர் ஆவார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close