ஒருநாளில் அதிக ஸ்கோர்: ரோஹித் சர்மாவை நெருங்கிய நியூசிலாந்து வீராங்கனை

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 12:09 pm
amelia-kerr-becomes-3rd-cricketer-to-register-highest-score-in-odi-history

ஒருநாள் போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து மகளிர் அணியின் அமெலியா கேர் (17) இடம் பிடித்துள்ளார். 

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தின் கேர், 232 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க்கை பின்னுக்கு தள்ளினார். 1997ம் ஆண்டு பெலிண்டா கிளார்க், 229 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பையில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக கிளார்க், அந்த சாதனையை படைத்திருந்தார். 

கேர், 145 பந்துகளில் 232 ரன் விளாசினார். 31 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஒருநாள் போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்துள்ள மகளிர் பட்டியலில் கிளார்க்கை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்தார் கேர். ஒட்டுமொத்த பட்டியலில், மூன்றாவது இடத்தில் கேர் இருக்கிறார். இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்திலும், நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

ஒருநாள் போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்த வீரர்கள் பட்டியல்:

போட்டியாளர் ஸ்கோர் அணி எதிரணி இடம் ஆண்டு
ரோஹித் சர்மா 264 இந்தியா இலங்கை  கொல்கத்தா 2014-15
மார்ட்டின் குப்தில் 237 நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் வெல்லிங்டன் 2014-15
அமெலியா கேர் 232 நியூசிலாந்து மகளிர் அயர்லாந்து டப்லின் 2018
பெலிண்டா கிளார்க் 229 ஆஸ்திரேலியா மகளிர் டென்மார்க் மும்பை 1997-98
விரேந்தர் சேவாக் 219 இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இந்தூர் 2011-12

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close