ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா வரலாற்று வெற்றி

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 05:28 pm
india-won-by-an-innings-and-262-runs-against-afghanistan-s-historic-test-match

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. 

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. முடிவில் 109 ரன்னில் சுருண்டது. 

இதை அடுத்து ஃபாலோ-ஆன் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்களை மளமளவென இழந்து மண்ணை கவ்வியது. போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆப்கான் அணி, 103 ரன்னில் ஆட்டமிழந்தது. ஜடேஜா 4, உமேஷ் 3, இஷாந்த் 2, அஷ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 262 ரன் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்து கோப்பையை தன்வசப்படுத்திக் கொண்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close