2019ல் ஆப்கானிஸ்தானின் அடுத்த டெஸ்ட் போட்டி

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 05:04 pm
afghanistan-to-play-their-next-test-match-in-2019

ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் கிரிக்கெட் என்னும் புதிய கிரிக்கெட் உலகில் இணைந்தது. நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவுடன் பெங்களுருவில் ஆப்கானிஸ்தான் மோதி இருந்தது. ஆனால், வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் ஆப்கான் தோல்வி அடைந்தது. 

ஒரு நாளில் நடந்த இரண்டு செஷனிலும் இந்தியா, ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 262 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டி என்பதால் ஆப்கானிஸ்தான் இப்போட்டியின் மூலம் தங்களை அடுத்த போட்டிகளில் இருந்து மேம்படுத்திக் கொள்ளும். 

இந்த நிலையில் தங்களது அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் தயாராகி உள்ளது. 2019ம் ஆண்டு இவர்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் களமிறங்குகின்றனர். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் போட்டியில் அயர்லாந்துடன் ஆப்கானிஸ்தான் மோதுகிறது. இந்த செய்தியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தினார். 

தலைமை செயல் அதிகாரி ஷஃபிக் ஸ்டானிக்ஜாய் கூறுகையில், "2019 உலக கோப்பை வரை எங்களுடைய திட்டம் தயாராக உள்ளது. ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு அணி சுற்றுப்பயணம் செய்கிறது. ஆசிய கோப்பையில் நாங்கள் விளையாடுகிறோம். பிறகு, உள்ளூர் டி20 லீக் போட்டியில் பங்கேற்கிறது. உலக கோப்பை மற்றும் அடுத்த டெஸ்ட் போட்டிக்காகவும் நாங்கள் தயாராகி வருகிறோம்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close