விராட் கோலிக்கு பதில் மாற்று வீரரை அறிவித்தது சர்ரே

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 05:52 pm
surrey-announced-replacement-for-virat-kohli

கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு பதில் மாற்று வீரரை அணியில் இணைத்தது சர்ரே.

இங்கிலாந்து தொடருக்காக பயிற்சி எடுக்க கவுன்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய கேப்டன் விராட் கோலி முடிவு செய்தார். அதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரை புறக்கணித்த அவர், இம்மாதம் கவுன்டி கிரிக்கெட்டில் பங்கேற்கும் சர்ரே அணிக்காக விளையாட இருந்தார். 

ஆனால், ஐ.பி.எல் போட்டியின் போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலியால், கவுன்டி போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், கோலிக்கு பதில் தென் ஆப்பிரிக்க வீரர் தேயூனிஸ் டி ப்ருயனை சர்ரே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி, இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் கோலி தேர்ச்சி பெற்றுள்ளதால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அவர் பங்கேற்பதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என உறுதியாகியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close