மஹேலவை தொடர்ந்து தேசிய அணியின் பதவியை மறுத்த முரளிதரன்

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 12:56 pm
after-jayawardane-its-muralitharan-to-reject-slc-offer

மஹேல ஜெயவர்தனேவை தொடர்ந்து முத்தையா முரளிதரனும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பதவியை வேண்டாமென மறுத்துள்ளார்.  

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணி, சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இதனால் சிறப்பாக செயல்படாத தேசிய அணிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய ஆலோசகர்கள் குழுவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த குழுவில், மஹேல ஜெயவர்தனே, முத்தையா முரளிதரன், குமார் சங்ககாரா ஆகியோரை இணைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதனபடி முதலில் ஜெயவர்தனேவிடம் சில நாட்களுக்கு முன், அப்பதவியை ஏற்க கிரிக்கெட் வாரியம் அணுகியது. அது பற்றிய தனது கருத்தை ஜெயவர்தனே சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அதில், "மதிப்பிற்குரிய தேர்வுக்குழு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு... நான் ஓராண்டு காலம் கிரிக்கெட் கமிட்டி மற்றும் சிறப்பு ஆலோசனை குழுவில் பணியாற்றியுள்ளேன். ஆனால், எந்தஒரு பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உங்களுடைய இந்த சிஸ்டமில் எனக்கு நம்பிக்கை இல்லை. யாராவது நேரத்தை வாங்க விரும்பினால், தயவு செய்து எங்களைப் பயன்படுத்த வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரனை கிரிக்கெட் வாரியம் அணுகியுள்ளது. இதற்கு முரளிதரன், "நான் இதை ஒரு நேர்மையற்ற பார்வையில் பார்க்கிறேன். மிகவும் தந்திரமான நடவடிக்கை. கிரிக்கெட் நிர்வாகம் இத்தகைய மோசமான நிலையில் இருக்கும்போது எங்களை பயன்படுத்த நினைக்கிறது. மஹேல வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு உறுதியாக நிற்பேன்" என்றார். 

133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி, டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் முரளிதரனும் பதவியை மறுத்ததால், என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நிற்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close