2019 உலக கோப்பை: இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா அர்ச்சர்?!

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 04:11 pm
jofra-archer-may-represent-england-in-2019-wc

2019ம் ஆண்டு உலக கோப்பையில் பங்கேற்பதற்கான தகுதியை ஜோஃப்ரா அர்ச்சர் பெற வாய்ப்பு உள்ளது. 

பார்படாஸை சேர்ந்த அர்ச்சர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடலாம். வெஸ்ட் இண்டீஸூக்காக யு-19 அணியில் விளையாடிய அர்ச்சர், அவருடைய தந்தையின் நாட்டுக்காக 2022ம் ஆண்டு விளையாட தகுதி பெறுவார். ஆனால், அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக அவர் தேர்வாகுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

இங்கிலாந்து அணியில் தேர்வாக சில விதிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானதாக வசிப்பிட காலம் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் ஏழு ஆண்டுகள் வசித்திருந்தால் மட்டுமே அவருக்கு அந்நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும். மேலும், ஓராண்டுக்கு வீரர்களுக்கு 210 நாட்களாவது உள்ளூரில் தங்கியிருக்க வேண்டும். 

தற்போது வந்துள்ள செய்திப்படி, இங்கிலாந்து விரைவில் வசிப்பிட காலத்தின் விதிமுறையை மாற்றத்தை கொண்டு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுக்கு வசிப்பிட காலத்தை குறைக்க உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இங்கிலாந்து குறைக்கும் பட்சத்திலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் உள்ள 12 உறுப்பினர்களின் ஒப்புதலும் பெற வேண்டும். 

இந்த மாற்றங்கள் நடக்குமெனில், அடுத்த சிசனிலேயே அர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக தேர்வாக அதிக வாய்ப்பு இருக்கிறது. 

23 வயதாகும் அர்ச்சரை, கிறிஸ் ஜோர்தான் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சக்ஸஸ் அணிக்காக பரிந்துரை செய்தார். பிக் பேஷ் லீக் போட்டியிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்த அர்ச்சர், ஐ.பி.எல்-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரராகவும் திகழ்ந்தார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close