இங்கிலாந்து அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 05:38 pm
ben-stokes-chris-woakes-ruled-out-from-england-odi-squad

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட காரணத்தினால், இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து விலகி உள்ளனர். பென் ஸ்டோக்ஸிற்கு தொடை எலும்பில் காயப்பட்ட நிலையில், வோக்ஸிற்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டோக்ஸ் உடற்தகுதி பெற்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ஆனால், வோக்ஸின் காயத்தன்மை மிகுந்த தீவிரத்துடன் இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரை நடைபெறும் போட்டிகளில் வோக்ஸ் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ரெண்ட் பிரிட்ஜில் ஜூலை 12ம் தேதி இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close