ஆஸி. தொடர்: இங்கிலாந்து அணியில் மீண்டும் இணையும் மோர்கன்

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 12:50 pm
eoin-morgan-to-play-in-3rd-odi-against-australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் இணைகிறார் இயான் மோர்கன். 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தொடரை கைப்பற்றும் முன்னைப்பில் இருக்கும் இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியை இன்று (19ம் தேதி) சந்திக்க இருக்கிறது. 

முன்னதாக, காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் இருந்து கேப்டன் மோர்கன் விலகி இருந்தார். அவருக்கு பதில் ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். மேலும், சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது மோர்கன் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இணைய இருக்கிறார். 

இங்கிலாந்து அணி: இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளான்கேட், அதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, மார்க் வுட்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close