தோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்

  நந்தினி   | Last Modified : 03 Jul, 2018 11:21 am
interesting-facts-about-captain-cool-ms-dhoni

இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ். தோனி. எப்போதும் தோனி ரசிகர்களின் பார்வையிலேயே இருப்பார். களத்திலும் சரி, வெளியேவும் சரி இவர் என்ன செய்தாலும், அது தலைப்புச் செய்தி தான். ஐசிசி-ன் மூன்று கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்ற தோனி, ஐ.பி.எல்-ல் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்து, சி.எஸ்.கே ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தோனி குறித்த விஷயங்களை உடனுக்குடன் அப்டேட் செய்து வைரலாக்கி வரும் ரசிகர்கள், அவர் பற்றிய சில அறியாத விஷங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

கிரிக்கெட்டுக்கு வெளியே தோனியின் வாழ்க்கை:

ரஹிட்டி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தற்போது தோனி ஷேர்ஹோல்டராக இல்லை என்றாலும், ஒருகாலத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து 15 சதவீத பங்கை பெற்று வந்தார். இந்த நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர்களை தங்களது வாடிக்கையாளர்களாகவும் பெற்றுள்ளது. ஆனால், கிரிக்கெட்டுக்கு வெளியில் தோனி இது போன்ற ஆதாயம் பெற்று வருவது சர்ச்சைக்குள்ளானது. இதனை தொடர்ந்து, தோனி அந்நிறுவனத்தில் ஷேர்ஹோல்டராக இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. ஒரு குறுகிய காலம் வரை தான் அவர் ஷேர்ஹோல்டராக இருந்தார். 

ஆனால், அது அவரை விளையாட்டுக்காக முதலீடு செய்வதில் இருந்து நிறுத்தவில்லை. சஹாரா இந்தியா பரிவாருடன் சேர்ந்து, தோனியின் ராஞ்சி ரெய்ஸ் இணை உரிமையாளராக இருக்கிறது. ராஞ்சி ரெய்ஸ், ராஞ்சியை அடிப்படையாக கொண்ட ஹாக்கி கிளப் ஆகும். இது ஹாக்கி இந்தியா லீக் போட்டிகளில் பங்கேற்கும். 

பைக் பிரியரான தோனி, தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகர்ஜுனாவுடன் சேர்ந்து, சூப்பர்ஸ்போர்ட் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பின் துணை பார்ட்னராக இருக்கிறார். அப்போட்டியில் மஹி ரேஸிங் டீம் இந்தியா பங்குபெறும். தோனிக்கு கால்பந்து போட்டியில் இஷடம் என்பதிலும் சந்தேகம் இல்லை. அபிஷேக் பச்சன் மற்றும் விதா டானியுடன் சேர்ந்தது சென்னையின் எஃப் கால்பந்து அணியின் இணை உரிமையாளராகவும் தோனி இருக்கிறார். 

டிக்கெட் பரிசோதகராக தோனியின் வாழ்க்கை:

ஜார்கண்டை சேர்ந்தவரான தோனி, நேராக கிரிக்கெட் வழியை தேடி வரவில்லை. அவருடைய ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை நம்மை மிகவும் சுவாரஸ்யமானதாக பார்க்க வைக்கும். ஆனால், தோனிக்கு அது வலி மிகுந்த நாட்கள். ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரராக உருமாவதற்கு முன்னதாக தோனி, ரயில் டிக்கெட் பரிசோதகராக தனது இளம் வயது முழுவதும் கழித்திருந்தார். 

கோரக்பூர் ரயில் நிலையத்தில் 2001ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை, தோனி ரயில் டிக்கட் பரிசோதகராக இருந்தார். அவருடன் பணிபுரிந்தவர்கள் தோனியை, இந்திய ரயில்வே துறையின் மிகவும் நேர்மையான மற்றும் நேரடியாக எதையும் பேசக்கூடிய ஊழியர் என்று கூறியுள்ளனர். 

இருப்பினும் தோனியின் குறும்புக்கார பக்கமும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்தது. அந்த செய்திப்படி, தோனி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, ரயில்வே வளாகத்தில் வெள்ளை போர்வையுடன் காவலர்களிடம் சென்று பேய் போன்று நடித்து அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளார்.

கால்பந்தை தவிர பேட்மின்டனும் விளையாடுவார்:

எம்.எஸ். தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை மற்றவர்களை போன்று அமையவில்லை. அவர் கிரிக்கெட் விளையாடுவார் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். கால்பந்து பயிற்சியாளர், ஒரு உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில் அவரை இணைத்தார். அவருக்கு நாம் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும். 

இதற்கு முன் தோனி, பேட்மின்டன் மற்றும் கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்தார். இரு போட்டிகளுக்கும், மாநில மற்றும் கிளப் லெவலுக்கு, தோனி தேர்வு செய்யப்பட்டார். கோல் கீப்பராக இருந்த அவர், தற்போது தலைச்சிறந்த விக்கெட்-கீப்பராக உருமாகி உள்ளார். இதுவும் அவர் 10ம் வகுப்பு படிக்கும் வரை அவருக்கு தெரியாது. அதன் பிறகு தான் அவர் கிரிக்கெட் போட்டியில் தனது கவனத்தை செலுத்தினார். 

கால்பந்து பயிற்சியாளர் இல்லையெனில், இந்திய அணிக்கு இவ்வாறான விக்கெட்-கீப்பர் கிடைத்துருப்பாரா என்பது சந்தேகம் தான். எனினும் கிரிக்கெட் போட்டி இல்லையென்றாலும், கோல் கீப்பராக இந்திய கால்பந்து அணியில் தோனி அசத்தியிருப்பார் என்பதிலும் நம்மக்கு சந்தேகமில்லை. சரி தானே..

கேப்டன் பதவிக்கு தோனியை பரிந்துரை செய்த சச்சின்:

ஐசிசி-ன் மூன்றுவித கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி என்று சொல்வதில் அனைவரும் பெருமை கொள்கிறோம். 2007 ஐசிசி உலக டி20, 2011 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பைகளை அவர் கைப்பற்றி இருந்தார். ஆனால், தோனிக்கு கேப்டன் பதவி கிடைக்க முக்கிய காரணமாக இருந்த அந்த லெஜெண்ட் வீரரை நாம் மறக்க கூடாது. 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடிய சச்சின் அணியில் 12-வது வீரராக இருந்தவர் தோனி. 199 ரன் அடித்து போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்த சச்சின், முதன்முதலில் தோனியை பார்த்து தண்ணீர் கேட்டார். அன்று முதல் சச்சினின் கவனத்தை தோனி பெற்று வருகிறார். இந்திய அணிக்காக புதிய கேப்டனை தேர்வு செய்யும் போது, தோனியை தேர்வு செய்ய ஜாம்பவான் காரணமாக இருந்துள்ளார். 

2007ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனை தேர்வு செய்ய நடந்த கூட்டத்தில், சச்சின் தோனியை பரிந்துரை செய்தார். அவருடைய நிதானம், திறமை அணியை சிறந்த முறையில் வழி நடத்தும் என்று நம்பினார். அது ஒரு அற்புதமான முடிவு என்பதில் மறுப்பு ஏதுமில்லை. 

கௌரவ ரேங்க் பெற்ற 2-வது இந்திய வீரர்:

தலைச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, இந்தியாவுக்காக பாடுபடும் ராணுவத்திற்காக அவர் சிறப்பு மரியாதையை வைத்திருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். கிரிக்கெட் போட்டிகளில் தான் இல்லாத சமயம், ராணுவத்திற்காக தனது பணியை ஆற்றுவார். 

2011ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி, இந்திய தரைப்படை ராணுவம், லெப்டினன்ட் கர்னல் கௌரவ ரேங்க்கை, தோனிக்கு  வழங்கி பெருமைப்படுத்தியது. இதன் மூலம், கௌரவ ரேங்க்கை, உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு பிறகு பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். 

துலீப் ட்ராஃபி அறிமுக போட்டியை பாழாக்கிய டாடா சுமோ கார்:

தேசிய அணியில் தோனிக்கு எப்போதும் ஒரு சுமுகமான சூழ்நிலையே இருந்துள்ளது. அது மாநில அளவில் இருந்ததில்லை. அவர் அந்த இடத்திற்கு வர மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஆனால், துரதிஷ்டம் அவரை மென்மேலும் கஷ்டத்தில் தள்ளியது. 

துலீப் ட்ராஃபி போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக தோனி விளையாட இருந்தார். ஆனால், அப்போட்டிக்காக அணி எப்போது செல்கிறது என்ற விவரத்தை தோனியிடம் யாரும் கூறவில்லை. அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லாத காலம். பீகார் கிரிக்கெட் சங்கம் அனுப்பிய செய்தி, நேரத்திற்கு தோனியை சென்றடையவில்லை. அந்த செய்தி ராஞ்சியை அடையும் போது, அணி போட்டிக்காக அகர்தலாவுக்கு சென்றடைந்தது. 

இருப்பினும் அவருடைய நண்பர் பரம்ஜித் சிங், ஒரு டாடா சுமோ காரை ஏற்பாடு செய்து, 20 மணி நேரத்திற்குள் தோனியை போட்டி நடக்கும் இடத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றார். துரஷ்ஷிடவசமாக கார் சேதமடைந்தது. அதனை சரி செய்து இடத்திற்கு வருவதற்குள் நேரம் முடிந்து போனது. தோனிக்கு பதில் தீப் தாஸ்குப்தா விக்கெட்-கீப்பராக களமிறக்கப்பட்டார். 

அதன் பிறகு, இரண்டாவது போட்டியில் தோனி கலந்து கொண்டார். அங்கு தான் சச்சின் டெண்டுல்கரை அவர் முதன்முதலில் பார்த்தார், 12-வது வீரராக.

தோனியின் நீண்ட கூந்தலின் ரகசியம்:

தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் பல ஹேர்ஸ்டைல்களை வைத்து அசத்தியுள்ளார். குளிர், நவநாகரீக மொஹாக் அல்லது பாரம்பரிய தோற்றம் என ஏதுவாக இருப்பினும், புதிய ஸ்டைல்களை முயற்சி செய்து பார்ப்பதில் தோனி வெட்கப்பட்டதே கிடையாது. 

ஆனால், அவரது ஒரு ஹேர்ஸ்டைல் மட்டும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் எனில் அது அவரது நீண்ட கூந்தல் தான். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமான காலத்தில் அவர் தனது நீண்ட கூந்தலுடன் தான் களத்திற்கு வருவார். தோனியின் அந்த ஹேர்ஸ்டைலுக்கு காரணம் என்ன என்பதே பலரது கேள்வியாக இருந்தது. 

இதனை ஒருமுறை பேட்டியின் போது தோனியிடன் ஒரு நிருபர் கேட்டார். அதற்கு தோனி, தனது கூந்தல் ஸ்டைலுக்கு, நடிகர் ஜான் ஆபிரகாம் தான் காரணம் என்று சொன்னார். ஜான் ஆபிரகாம் மற்றும் பிபாஷா பாஸுவுடனான, தோனியின் நட்பு பலர் அறியாததே. அவருடைய ஸ்டைலுக்கு காரணம், ஆபிரகாமின் ஹேர்ஸ்டைல் அந்த சமயத்தில் தோனியை கவர்ந்ததினால் தான். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close