ஆஸ்திரேலியாவை கிழித்து தொங்கவிட்ட இங்கிலாந்து... புதிய உலக சாதனை!

  shriram   | Last Modified : 19 Jun, 2018 10:29 pm
england-destroy-australian-bowlers-to-score-481-in-50-overs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 481 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், தொடரை கைப்பற்ற இன்று முயற்சித்தது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங் செய்தது. இங்கிலாந்தின் துவக்க வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் ராய் அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர். 82 ரன்கள் எடுத்திருந்த போது, பேர்ஸ்டோ ரன் அவுட்டானார். அதன் பின் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ், பேர்ஸ்டோவுடன் சேர்ந்து அதிரடியை தொடர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தனர். 13 ஓவர்களில் 100 ரன்களை தொட்ட இங்கிலாந்து, 30 ஓவர்களுக்குள் 250 ரன்களை கடந்தது. 92 பந்துகளில் பேர்ஸ்டோ 139 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

தொடர்ந்து வந்த மார்கனும் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தார். 92 பந்துகளில் 147 ரன்கள் எடுத்திருந்த போது ஹேல்ஸ் அவுட்டானார். 46வது ஓவர் முடிவில், 450 ரன்களை தொட்டு, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த சாதனையை இங்கிலாந்து முறியடித்தது. இதற்கு முன் 444 ரன்கள் என தன்னுடைய சாதனையையே இங்கிலாந்து முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின், 147 ரன்கள் எடுத்திருந்த ஹேல்ஸ் அவுட்டானார். 500 ரன்களை இங்கிலாந்தால் தொட முடியுமா என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ரிச்சர்ட்சன் பந்தில் தொடர்ந்து இரண்டு விக்கெட்கள் விழ, இங்கிலாந்தின் ரன் ரேட் குறைந்தது. 50 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close