ராகுல் ட்ராவிடும், கங்குலியும் முதல் டெஸ்ட் விளையாடிய நாள் இன்று!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 02:07 pm
on-this-day-dravid-and-dada-played-their-debut-test-match

22 வருடங்களுக்கு முன் ராகுல் ட்ராவிடும், கங்குலியும் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாள் இன்று. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ராகுல் ட்ராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து எதிராக 1996ம் ஆண்டு ஜூன் 20ந்தேதி விளையாடினர். 

அந்த போட்டியில் கங்குலி, 131 ரன்கள் எடுத்தார். இதுவரை அந்த மைதானத்தில் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் கங்கலி தான் முதல் இடத்தில் இருக்கிறார். சவுரவ் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7212 ரன்கள் எடுத்திருக்கிறார். அதில்  16 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். 

டெஸ்ட் போட்டிகளின் நாயகன் ராகுல் டிராவிட் அந்த போட்டியில் 93 ரன்கள் எடுத்தார். இந்தியா தோல்வியடைந்து விடும் தருவாயில் எல்லாம் சுவர் போல் நின்று விளையாடி வெற்றி பெற செய்த அவர், 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 36 சதங்களும், 63 அரைசதங்களும் அடங்கும். 

இவர்கள் மட்டும் அல்ல தற்போதைய கேப்டன் விராட் கோலியும் இன்று தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 2011ம் ஆண்டு வெஸட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடினார். அந்த போட்டியில் அவர் 4 ரன்கள் மட்டுமே  எடுத்துவிக்கெட்டை இழந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close