ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 03:23 pm
statiscal-highlights-of-england-australia-3rd-odi-match

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி 481 ரன் குவித்த நிலையில், ஆஸ்திரேலியா 239 ரன்னில் ஆட்டமிழந்திருந்தது. இப்போட்டியில் நடந்த சாதனைகளின் புள்ளி விவரம் பின் வருமாறு:-

* 481- ஒருநாள் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் இது. 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 444 ரன் எடுத்திருந்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதனை தற்போது இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது. 

* இங்கிலாந்தை விட லிஸ்ட் ஏ அணி அதிக ரன்களை குவித்துள்ளது. 2007ம் ஆண்டு, கவுன்டி போட்டியில் சர்ரே அணி 496 ரன் அடித்திருந்தததே, அனைத்தையும்விட அதிகம். இந்த பட்டியலில் மூன்றாவது மிகப்பெரிய ஸ்கோர் இந்திய ஏ அணிக்கு உடையது. அண்மையில் 458 ரன்னை இந்திய ஏ அணி குவிந்திருந்தது. 

* பாலினம் பிரிக்கப்படாமல் பார்த்தால், நியூசிலாந்து மகளிர் அணி, 11 நாட்களுக்கு முன் 490 ரன் விளாசி இருந்ததே மிகவும் அதிகபட்சம் ஆகும்.

* ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் இயான் மோர்கன் 5,443 ரன்களை நிறைவு செய்தார். இதன் மூலம், முன்னாள் வீரர் ஐயன் பெல்லை (5,416) அவர் முறியடித்தார். 

* மோர்கனுக்கு முன்னதாக, இங்கிலாந்து மண்ணில் யாரும் 3000 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. தற்போது அவரிடம் 3,046 ரன்கள் உள்ளது. ஐயன் பெல், இங்கிலாந்து மண்ணில் 2,548 ரன் எடுத்திருந்தார். 

* 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கி மோர்கன் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் இவர் தான். இதற்கு முன், பாகிஸ்தானுக்கு எதிராக ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். 

* இங்கிலாந்து அணி, 21 சிக்ஸர்களை பறக்கவிட்டது. வரலாற்றில் இது 2-வது மிகப்பெரியதாகும். ராய் 4, பேர்ஸ்டோவ் 5, ஹேல்ஸ் 5, பட்லர்1, மோர்கன் 6 சிக்ஸர்களை அடித்தனர். 2013-14ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்ஸர்கள் விளாசி இருந்தது. அதுவும் 21 ஓவர் போட்டியில்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close