ஆயுத உரிமம் கோரியுள்ள தோனி மனைவி சாக்ஷி

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 12:47 pm
dhoni-s-wife-sakshi-applies-for-arms-license

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மனைவியான சாக்ஷி, ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம் ஆயுத உரிமம் கோரியுள்ளார். 

இந்திய வீரர் தோனி, பெரும்பாலும் சர்வதேச போட்டிகளுக்காக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக இல்லத்தில், அவரது மனைவி மற்றும் குழந்தை ஸிவா மட்டுமே வசிப்பர். இதனால் குழந்தையுடன் தனியாக வசிக்கும் சாக்ஷி, பாதுகாப்பு கரங்களுக்காக கை துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம் ஆயுத உரிமம் கோரியுள்ளார். 

அவர் தன்னுடைய பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருக்கிறார். "நான் வேலைக்கு தனியாக செல்கிறேன் மற்றும் நான் எனது பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக உணர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, தோனிக்கு சொந்தமாக கை துப்பாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு ராஞ்சியின் டலடாலியில் உள்ள அவர்களின் பண்ணை வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் தோனி. அதற்கு முன், ஹார்மு ஹவுசிங் காலனியில் தங்கி இருந்தார். 2014-15ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2016-17ல் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சக வீரராக விளையாடி வருகிறார். சமீபத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3-வது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close