ஹர்திக் பாண்டியாவுக்கு நினைவு பரிசு கொடுத்த மான்செஸ்டர் யுனைடெட்

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 11:48 am
hardik-pandya-received-iconic-gift-from-manchester-united-club

பிரபல மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிடம் இருந்து அடையாளச் சின்னமாக பரிசு ஒன்றை பெற்றுள்ளார் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 

ஐ.பி.எல் சீசன் முடிந்து ஓய்வில் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா, அடுத்ததாக இந்திய அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இவர் அண்மையில் கல்ஃப் ஆயில் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2011ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி, ஓர் அங்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கல்ஃப் ஆயில் நிறுவனம், பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் கிளப்பின் ஸ்பான்சராக உள்ளது. இந்த நிலையில், பாண்டியா, மான்செஸ்டர் கிளப்பிடம் இருந்து ஃப்ரேம் போடப்பட்டிருந்த ஜெர்ஸியை பரிசாக பெற்றுள்ளார். அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த பரிசுக்காக கல்ஃப் ஆயில் நிறுவனத்திற்கும், மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்கும் எனது மிகப்பெரிய நன்றி" என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close