ஒப்பந்தம்படி இந்திய வீரர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை- பிசிசிஐ

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 12:58 pm
indian-cricketers-yet-to-receive-the-contracts-says-bcci

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்னும் ஒப்பந்தம்படி ஊதியம் வழங்கவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னிலை வகிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தில், பிசிசிஐ திருத்தம் மேற்கொண்டது. அதில் வீரர்களுக்கு ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் படி வீரர்களுக்கு அவர்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்று பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுதிரி தெரிவித்துள்ளார். 

ஒப்பந்தம் குறித்த கூட்டத்திற்கு பிறகு சவுதிரி அளித்த பேட்டியில், "வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் என்னிடம் தான் இருக்கிறது. ஆனால், இதற்கான ஒப்புதல் பெற்றால் மட்டுமே என்னால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். பொதுக்குழுவின் முடிவில் தான் அனைத்தும் உள்ளது. அவர்கள் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் என்னால் ஏதும் செய்ய முடியாது. என்னால் சட்டத்தை மீற முடியாது. 

வீரர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் சென்று சேரவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது. பொதுக்குழுவின் முடிவு என்ன என்பதற்கான துப்பு என்னிடம் இல்லை. ஆனால், 
நீண்ட நாட்களாக நிதிக்குழுவிடம் தான் பரிந்துரைகள் உள்ளன. வீரர்கள் கையொப்பமிட்டவுடன், அந்த ஒப்பந்தங்கள் செயலாளரிடம் தான் இருக்கும்" என்றார். 

மேலும் கூட்டத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கான இழப்பீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், தங்களுடன் இருதரப்பு போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றும் அதற்காக இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து பதில் வாராத நிலையில், ஐசிசி-க்கு நோட்டீஸ் அனுப்பியது. பிசிசிஐ, 70 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close