"இது பேரழிவுக்கான செயல்முறை": சச்சின் ஆதங்கம்

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 03:53 pm
sachin-tendulkar-criticise-the-use-of-2-balls-in-odi-s

ஒருநாள் போட்டியில் இரு புதிய பந்துகள் வழங்கப்படுவது பேரழிவுக்கான சரியான செயல்முறை என்று சச்சின் டெண்டுல்கர் ஆதங்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மிகப்பெரிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதே போன்று, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து மகளிர் அணி மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. ஆனால், இது பேரழிவை உண்டாக்கும் என்று சச்சின் எச்சரித்துள்ளார். 

சச்சின் ட்வீட்டில், "ஒருநாள் கிரிக்கெட்டில் இரு புதிய பந்துகள் வழங்கினால், அது தான் பேரழிவுக்கான சரியான செயல்முறை. இதனால் ஒவ்வொரு பந்துக்கும் ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கான நேரம் கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை நம்மளால் பார்க்க முடிவதில்லை" என்று பதிவிட்டுள்ளார். 

சச்சினின் இந்த ட்வீட்டிற்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சர்லர் வாக்கர் யூனிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். "இதற்காக தான் நாங்கள் அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில்லை. அவர்கள் தற்காப்பு ஆட்டத்தில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். ரிவர்ஸ் ஸ்விங் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது" என்று யூனிஸ் ரி-ட்வீட் செய்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close