'அவர் பயங்கரமான கால்பந்து வீரர்'- இந்திய அணியை கலாய்க்கும் யுவராஜ்

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 05:23 pm
yuvraj-singh-reveals-about-the-excellent-soccer-in-indian-cricket-team

விளையாட்டில் பல பிரிவுகளில் பங்கேற்கும் வீரர்கள், குறிப்பிட்ட ஒரு போட்டியில் தான் சிறந்து விளங்குவார்கள் என்ற கருத்துக்கே இடமில்லை. ஏனெனில், நம் இந்திய கிரிக்கெட் அணியிலேயே வீரர்கள், டென்னிஸ், கால்பந்து, பேட்மின்டன் என அனைத்திலும் ஒரு கை பார்க்க கூடியவர்கள். அதிலும் தோனி, கோலி பற்றி சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் கால்பந்து ஆடிய போட்டிகளை நாம் பார்த்துள்ளோம்.

இந்த நிலையில், முன்னணி வீரர் யுவராஜ் சிங், பேட்டி ஒன்றில், இந்திய கிரிக்கெட் அணியில் யார் சிறப்பாக கால்பந்து ஆடுவார் என்ற கேள்விக்கு குறும்புத்தனமான பதில்களை தந்துள்ளார். அதே நேரம் தோனி ஒரு சிறந்த கால்பந்து வீரர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் பின் வருமாறு:-

விராட் கோலி- "விராட் மிகவும் சிறந்த உடற்தகுதியை பெற்றுள்ளார். அவர் பிட்ச்சின் இடையே அதிவேகமாக ஓடுவார். ஆனால், அவர் கோல் அடிப்பதில் தவறவிடுகிறார். அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்" என்றார். 

பும்ரா- "பும்ரா, கால்பந்து விளையாட மாட்டார். ஹர்திக் பாண்டியா மோசமான கால்பந்து ஆட்டக்காரர். அவர் கால்பந்து ஆட்டத்தில் அவருடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார். 

ரோஹித் சர்மா- "ரோஹித், ஒரு பயங்கரமான கால்பந்து வீரர். அவர் பந்தை பாஸ் செய்வார். ஆனால், அது நகராது. ஜாஹீரும், ரோஹித் போல தான். அவர் நன்கு கால்பந்து மைதானத்தில் செயல்பட வேண்டும். ஆஷிஷ் நெஹ்ரா, அவருக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், கால்பந்தே விளையாட கூடாது என்பது தான். ஏனெனில், எப்போது கால்பந்து விளையாடினாலும், அவருக்கு காயம் ஏற்பட்டுவிடும்" என சொல்லி சிரிக்கிறார். 

எம்.எஸ். தோனி- "மஹி, ஒரு அற்புதமான கால்பந்து ஆட்டக்காரர்" என்று தெரிவித்தார்.

எப்போதும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி மீது தான் யுவராஜ் மிகுந்த ஆர்வத்தை காட்டுவார். கால்பந்து ஆட்ட பிரியரான யுவராஜ், நடந்து வரும் உலக கோப்பையில் தனது ஆதரவு பிரான்ஸ் அணிக்கு தான் என்று கூறியுள்ளார். ஏனென்றால், அந்த அணியில் தான் தனக்கு பிடித்தமான வீரர் பால் போக்பா இருப்பதாக கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close