உலக டி20: துவக்க ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 12:28 pm
india-new-zealand-to-open-compaign-in-2018-icc-women-s-world-t20

2018 மகளிர் உலக டி20 தொடரின் துவக்க போட்டியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதுகின்றன. 

கரீபியனில் வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி முதல் 24ந் தேதி வரை மகளிர் உலக டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கான அட்டவணை மற்றும் குரூப் பிரிவு விவரங்களை விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் டி.ஆர்.எஸ் முறை அமல்படுத்தப்பட்டது. எனவே இந்த தொடரில் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்பட இருக்கிறது. 

குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி-ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது.

செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில், குரூப் போட்டிகள் மற்றும் இங்கிலாந்து - இலங்கையின் முதல் போட்டியும் நடைபெறுகின்றன. ஆன்டிகுவாவில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், நவம்பர் 22ம் தேதி அரையிறுதி மற்றும் 24ம் தேதி இறுதி போட்டி நடக்க உள்ளன. 

உலக டி20 போட்டிக்கு டாப் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்றது. வரும் ஜூலை 7ம் தேதி நெதர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக டி20 தகுதிச் சுற்று போட்டியில் ஆசிய கோப்பை சாம்பியன் வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, உகாண்டா, யுனைடெட் அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close