இந்தியாவின் 100-வது டி20 போட்டியில் ரெய்னாவின் மைல்கல்

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 03:15 pm
suresh-raina-reaches-1500-run-mark-in-india-s-100th-t20i-match

இந்தியா பங்கேற்ற 100-வது டி20 போட்டியில் சுரேஷ் ரெய்னா, 1500 ரன்களை நிறைவு செய்தார். 

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி, 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டி இந்தியாவுக்கு 100-வது டி20 ஆட்டமாகும். 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக இந்திய அணி களமிறங்கியது. அப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருந்தது. 

2007ல் உலக டி20 கோப்பையை இந்தியா கைப்பற்றியது. 99 போட்டிகளில் விளையாடி 61 ஆட்டங்களில் வெற்றியை ருசித்திருக்கிறது. 100 அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அணிகள் பட்டியலில் பாகிஸ்தான (128), நியூசிலாந்து (111), இலங்கை (108), தென் ஆப்பிரிக்கா (103), ஆஸ்திரேலியா (100) ஆகிய அணிகளுடன் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. 

நேற்று நடந்த 100-வது போட்டியில் இந்தியா 62-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, 1500 டி20 ரன்களை நிறைவு செய்தார். தனது 74-வது டி20 போட்டியில் ரெய்னா, இந்த மைல்கல்லை எட்டினார். டி20ல் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (1,989), ரோஹித் சர்மாவுக்கு (1,936) பிறகு மூன்றாவது வீரராக ரெய்னா சேர்ந்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close