உலகில் 90 சதவீதம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் தான் உள்ளனர்

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 08:50 am
india-has-90-percent-of-one-billion-cricket-fans

உலகிலவில் கிரிக்கெட்டிற்கு இருக்கும் 100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் தான் இருப்பதாக ஐசிசி ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கிரிக்கெட் உலகளவில் கால்பந்துக்கு அடுத்தப்படியாக அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். ஐபிஎல் தான் உலகளவில் பிரபலமான கிரிக்கெட் தொடரும் கூட.

இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐசிசியில் இடம்பிடித்துள்ள 12 முக்கிய கிரிக்கெட் விளையாடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close