இந்திய அணியில் க்ருனால் பாண்டியா, தீபக் சாஹர் அறிமுகம்

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 10:32 am
deepak-chahar-krunal-pandya-gets-maiden-india-call-up-for-england-tour

ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இந்திய டி20 அணியில் அறிமுகமாகின்றனர். 

இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா மோதும் முதல் டி20 போட்டி நாளை (3ம் தேதி) மான்செஸ்டரில் நடக்கிறது. 

இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பும்ரா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர், காயம் காரணமாக விலகினர். அவர்களுக்கு பதில் ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இந்திய அணியில் அறிமுகமாகிறார்கள். 

கடந்த ஜூன் 26ம் தேதி டப்லினில் பயிற்சி எடுத்த போது, வாஷிங்டன் சுந்தரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்திருந்த அவர், அதில் இருந்து விலகினார். மேலும், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது, தனது இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா, ஒருநாள் அணியிலும் இடம் பிடித்துள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியாவை டி20 அணிக்கு தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணியில் இணையும் மூன்றாவது சகோதர வீரர்கள் என்ற பெயரை க்ருனால் - ஹர்திக் பெற்றுள்ளனர். இதற்கு முன், மொஹிந்தர் - சுரீந்தர் அமர்நாத் மற்றும் இர்ஃபான் - யூசப் பதான் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சகோதர்கள் ஆவர். 

ஐ.பி.எல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் 10 விக்கெட் எடுத்தும், தற்போது இங்கிலாந்து ஏ அணிக்காக எதிராக நடந்து வரும் போட்டியில் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வரும் தீபக் சாஹர், இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 

இவர்களை தவிர, ஒருநாள் அணியில், சுந்தருக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் சேர்க்கப்பட்டு உள்ளார். 

இந்திய டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close